மொத்தம் 13,588 மாணவர்களுக்கு 2022(2023) கல்விபொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களுக்கும் அதிவிசேடசித்தி கிடைத்துள்ளது.
கண்டி மகாமாயா பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த சமாதி அனுராதா ரணவக்க என்பவர் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்ஷெய்யா ஆனந்த ஸ்வானந்த் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த ஹரிதா மின்சந்து அழகக்கோன் ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
முடிவுகளின் அடிப்படையில், 72.02சதவீத மாணவர்கள் கல்விபொது தராதர உயர்தரப் பரீட்சை எழுத தகுதி பெற்றுள்ளனர்.