இலங்கையில் அடுத்ததாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி அனைவரின் ஆதரவையும் பெறக்கூடியவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் நடைபெறும் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாகவும் அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.
அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் மின்சார கட்டணத்தில் குறைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.