இலங்கையில் வேகமாக பரவும் நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுவாச நோய் மருத்துவர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இருமல் மற்றும் சளி டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சல் இருந்தால் அது பொதுவான வைரஸ் காய்ச்சல் என்று நினைத்து அலட்சியமாக இருக்காமல் டெங்கு வைரஸ் தொற்றிய பின்னரும் இந்த அறிகுறிகள் தோன்றக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு செயற்படுமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு தவிர, ஏனைய வைரஸ் நோய்களும் இந்த நாட்களில் பரவலாக பரவுவதனால், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொள்கிறார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply