யாழில் சீனி தட்டுப்பாடு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனியை பதுக்கி தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுத்துவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசம் ஊடாக கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் அதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனி கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply