செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவரை ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் அம்புலன்ஸ் சேவையாக இலங்கையின் இலவச அம்புலன்ஸ் சேவையான 1990 சுவா சரிய அம்புலன்ஸ் சேவை மாறியுள்ளது.
இந்நிலையில் ,
சமீபத்திய அபிவிருத்தியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது இலவச அம்புலன்ஸ் சேவையின் முன்னோடியான பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்த தொழில்நுட்ப சாதனையை சாத்தியமாக்கிய Wavenet மற்றும் Microsoft நிறுவனங்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதேவேளை, சுவா சரியவின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு முதலில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, சுவா சரிய ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக ரூபா 10,000 வழங்குவதாக உறுதியளித்தார்.