அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானா இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்கு வந்த அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜித் குணசேகர ஆகியோரே இந்த தரமற்ற இம்யூனோகுளோபுலின் சர்ச்சையின் மூளையாக செயல்பட்டதாகக் குற்றம் சுமத்தினார்.
வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அவர் சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்தை விட்டு வெளியேறினார்.