கிராம அலுவலர்களுக்கு மாதாந்த மேலதிக கொடுப்பனவு வழங்க தீர்மானம்!

நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக மேலதிகமாக 2,500 ரூபா வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினூடாக இதுவரை 5 ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் உதவித் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும்.

முன்னதாக உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி, எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் குறித்த விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply