பெண் வேடமிட்டு ஏமாற்றி Facebook மோசடி – நெல்லியடியில் இருவர் கைது

முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் பணத்தைப் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் நேற்று நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருடன் நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் முகநூலில் பெண் போல வேடமிட்டுப் பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார்.

இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலை வாசியை கத்தி முனையில் அச்சுறுத்தி அவரிடமிருந்த பணம் மற்றும் உடைமைகளை இருவர் கொள்ளையடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக திருகோணமலை வாசி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.

விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply