பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா இன்று யாழ் பல்கலைக்கழகத்தில்

ஈழத்து எழுத்தாளரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளருமான தீபச்செல்வனின் “பயங்கரவாதி“ நாவல் அறிமுகவிழா இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு மாணவர் ஒன்றியத் தலைவர் கே.துவாரகன் தலைமை தாங்கினார்.

பிரதம விருந்தினராக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும், சிறப்பு விருந்தினராக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி. கணேசலிங்கமும் கலந்துகொண்டனர்.

நாவல் விமர்சனத்தை சைவ சித்தாந்தத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் வழங்கினார்

You May Also Like

About the Author: digital

Leave a Reply