கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் காலை 9 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கையில், அம்பத்தலே நீர் விநியோகத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.