சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கைது!

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றையதினம் மாலை கைது செய்துள்ளனர்.

வடமத்திய கடற்படை கட்டளையினால் மன்னார் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​கடற்படையினர் 18 மீனவர்களுடன் 2 இந்திய மீன்பிடி இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும், மீன்பிடி இழுவை படகுகளும் மன்னார், தல்பாடு கடற்பரப்பில் கரைக்கு கொண்டு வரப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply