அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இது முதலில் பெப்ரவரி 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்தின் தாள் I மற்றும் தாள் II இரத்துச் செய்யப்பட்டு, சோதனைக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.
அதன்படி புதிய பரீட்சை திகதி மற்றும் நேரம் பின்வருமாறு இருக்கும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 பெப்ரவரி 1 ஆம்திகதி காலை 8:30 முதல் 11:40 மணி வரை – தாள் பகுதி IIவும், மதியம் 1:00 முதல் 3:00 மணி வரை – தாள் பகுதி Iவும் நடைபெறும்.