இன்று FAO இன் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று, இலங்கையில்  நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டின் 37வது அமர்வின் ஏற்பாடு அதன் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக இலங்கை வந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கொழும்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மாநாட்டின் அமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்திய மாநாடு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 46 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு உணவு மற்றும் விவசாயம் தொடர்பான சவால்கள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து விவாதித்து பிராந்திய ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு ஆசிய பசிபிக் பிராந்திய மாநாடு பிராந்தியத்தில் உணவு மற்றும் விவசாயத்தின் நிலை குறித்து கவனத்தை ஈர்க்கும் வேளாண் உணவு அமைப்புகள் மாற்றம் அத்தோடு குறிப்பாக சிறு விவசாயிகள் மற்றும் குடும்ப விவசாயிகளுக்கான தீர்வுகள் தொடர்பாக விவாதிக்க இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply