பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்- கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

நாட்டிலுள்ள அணைத்து உயர்தரப் பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அணைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சம வாய்ப்புகளை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கமாகும் எனவும் அதன் ஒரு நடவடிக்கையாக எதிர்வரும் மாதத்திற்குள் நாட்டிலுள்ள உயர்தரப் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதனடிப்படையில், இலங்கையில் உள்ள 3,000 உயர்தரப் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதுடன், இது தொடர்பான ஆசிரியர்களுக்கான பயிற்சி எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு கல்வி வலயங்களிலும் நிறுவப்பட்டுள்ள கணினி வள நிலையங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply