சுற்றாடல் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் கெஹெலிய ரம்புக்வெல்ல!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுற்றாடல் அமைச்சர் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.

இதன்படி, சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்திருந்த நிலையில், ஜனாதிபதி அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.

தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் கொள்வனவு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பெப்ரவரி 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி 3 ஆம் திகதி முன்னாள் சுகாதார அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.

மோசடிச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள ஒருவரை தொடர்ந்தும் அமைச்சரவையில் வைத்திருப்பதன் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடும் என்று பல்வேறு தரப்புகள் குற்றஞ்சாட்டி இருந்த நிலையில் அவர் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply