பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிஷின் மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளரின் கட்சி அலுவலகம் முன்பு நடந்த முதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
150 கிமீ தொலைவில் உள்ள கில்லா சைஃப் உல்லா மாவட்டத்தில் இரண்டாவது வெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு குண்டுவெடிப்புகளிலும் பலர் காயமடைந்தனர்.
பிஷினில் நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்காத நிலையில் இரண்டாவது குண்டுவெடிப்பு பற்றிய விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் கடந்த வாரம் வாக்கெடுப்பில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.
வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.