வெதுப்பகங்களுக்கு முக்கிய அறிவித்தல்!

நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 வெதுப்பகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பாண் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர், பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களி்ல் வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதேவேளை, வியாபாரிகள் தொடர்பாக நுகர்வோருக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1977 க்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply