மீகொட பொருளாதார மத்திய நிலையத்தின் கடையொன்றில் திருட முற்பட்ட குழுவொன்று நேற்று இரவு பெண் ஒருவரை துப்பாக்கிப் பிரயோகம் செய்து காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயுதம் தாங்கிய இருவர் பொருளாதார மையத்தில் உள்ள கடையொன்றின் பெண் காசாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஆயுதம் ஏந்திய குறித்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்ளை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.