உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கல்வி அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படாததன் காரணமாக தேசிய பாடசாலைகளுக்கு 54 அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற நபர்களை நியமித்ததன் மூலம் அதன் பணி வினைத் திறனற்றதாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தர வினாத்தாள்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படுகிறது. பெப்ரவரி இறுதிக்குள் அது முடிவடையும் எனவும் அதன்பின்னர், நடைமுறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் நிறைவடைந்த பின்னர் சாதாரண தர பரீட்சை தொடங்குவதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வௌியிடும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
