ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்யக் கோரிக்கை – அம்பாறையில் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில் வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்ய கோரி கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களால் அம்பாறையில் மாபெரும் கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் பேரணியானது மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் (14.02.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை கச்சேரியில் நடைபெறுகின்ற நிலையில், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸை ஆசிரியர்கள் இன்று நேரடியாக சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்.
இதன்போது அதனைக்கருத்தில் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த விடயத்துக்கு நியாயமான தீர்வு ஒன்றினை பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply