நாட்டை விட்டு தப்பி ஓடிய போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல்!

பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக 42 இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக புதிய பொலிஸ் சோதனைச் சாவடியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட தென்னகோன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், இன்று அதிகாலை இலங்கைக்கு நாடு திரும்பிய பிரபல பாதாள உலக பிரமுகர் சலிந்து மல்ஷிகா என்ற குடு சாலிந்துவின் முக்கிய தோழரான  குடு சாலிந்துவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பாக மேலும் பல தகவல்களை வெளிக்கொணரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் தோல்வியடைந்த ஹரக் கட்டா என்ற பாதாள உலக நபரான நடுன் சிந்தக்கவுக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தரையும் திருப்பி அனுப்புவதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்தார். 

இதேவேளை, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான ‘யுக்திய’வும் உறுதியான முறையில் முன்னெடுக்கப்படும் என தென்னகோன் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply