நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 656 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் போதைபொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 535 சந்தேகநபர்களும் குற்றப் பிரிவின் பட்டியலில் இருந்த 121 சந்தேக நபர்களும் அடங்கியுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 241 கிராம் 913 மில்லி கிராம் ஹெராயின், 139 கிராம் 892 மில்லி கிராம் ஐஸ்,1 கிலோ 744 கிராம் கஞ்சா, 27,780 கஞ்சா செடிகள், மாவா 10 கிராம், 1521 போதை மாத்திரைகள், 73 கிராம் மதன மோதகம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 535 சந்தேக நபர்களில் 16 சந்தேக நபர்கள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர்களாவர்.
அத்துடன் குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த 121 சந்தேக நபர்களில் 6 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணையும், 102 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்களுக்காக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவர்.