இலங்கை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதேவேளை பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகள் போன்ற அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தொடரஉள்ளதாக சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது