மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்!

வெலிமடை டயரபாவத்தை, மேல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளில் தெரியவருவது யாதெனில் பெண்ணின் கணவரே கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

36 வயதான டயரபாவத்தை மேல் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கணவன் மனைவியை கொடூரமாக தாக்கி பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்த 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply