ஈரான் ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம்!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி  விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு  வருகை தந்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர், இங்கு இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, மசகு எண்ணெய்க்காக இலங்கை ஈரானுக்கு செலுத்த வேண்டிய 250 மில்லியன் டொலருக்கு பதிலாக இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்ய  இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply