இலங்கை தமிழரசு கட்சியின் கலந்துரையாடல் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இக் கலந்துரையாடல் இன்று சிவஞானம் சிறீதரனின் கட்சி அலுவலகத்தில் நடை பெறுகிறது.
இந்நிலையில் கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ சுமந்திரன் மற்றும் சாணக்கியன் தவிர்ந்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
மேலும், இக் கலந்துரையாடலுக்கு தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த பீட்டர் இளஞ்செழியன் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த சந்திரசேகரம் பரா என்பவர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
