களனி பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் கைது!

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் கெலும் முதன்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெலும் முதன்நாயக்க பொலிஸாரை தவிர்த்து வந்துள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கெலும் முதன்நாயக்க இன்று (26) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply