ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ரணிலுக்கு ஆதரவா?

பொதுஜன பெரமுனவின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ரணிலை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் சம்மேளனத்தின் கூட்டம் ஒன்று வார இறுதியில் குருநாகலில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்ததுடன், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விசேட பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் தேர்தல்களில் ஆதரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர் பிரசன்ன, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்த போது எதுவித குறுக்கீடும் செய்யாத ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உரையை சிரித்தபடி செவிமடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இதன்மூலம் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் செய்தி வெளிவரத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply