அனுராதபுரம் மாவட்டத்துக்கான புதிய பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி. முத்துகுமாரன!

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை  இராஜினாமா செய்ததை அடுத்து  வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எஸ்.சி. முத்துகுமாரனவை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன  இன்று  தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு, அதிக வாக்குகளை எஸ்.சி. முத்துகுமாரன பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் திணைக்களத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, முத்துகுமாரனாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்படும் என தகவல்  தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply