பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!

சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 24 பாடசாலை மாணவர்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply