யாழில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள்!

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து உாிமையாளர்கள் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று (29.02.2024) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முறையான பேரூந்து தரிப்பிடம் இல்லாமையை காரணம் காட்டி உள்ளூா் மற்றும் நீண்ட துார தனியார் பேரூந்து சாரதிகள், நடத்துநர்கள் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் தனியார் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளதுடன் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை சந்திக்க நேர்ந்துள்ளது.

பொலிஸார் இதில் தலையிட்டு சில இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளை முற்றுகையிலிருந்து விடுவித்த போதும் சுமூகமான சேவை இடம்பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனியார் பேரூந்து உாிமையாளர்களின் கோரிக்கை தொடர்பாக பேசுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரை ஆளுநர் மற்றும் அரச அதிபரை சந்திக்க அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply