வீதிகள் புனரமைப்பு – நாடளாவிய ரீதியில் திட்டம்!

நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வீதிப் புனரமைப்புப் பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப்பங்களிப்புடன் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய தினம் (29.02.2024) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அடிக்கல் நடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு 1.500 கிலோ மீற்றர் வீதிப் புனரமைப்பு திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட இத் திட்டத்தினை வீதி போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக இடை நிறுத்தியிருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவில் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பணிப்புரைக்கு அமைவாக நாடாளாவிய ரீதியில் ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதிகளை புனரமைக்கும் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply