புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு அறிவித்தல்- நிறைவடையும் கால அவகாசம்!

கடந்த வருடம் இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏழாம் திகதியுடன் இந்த கால அவகாசம் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஏழாம் திகதிக்கு முன்னர் அவை உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்டு மீண்டும் அதிபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply