பாடசாலை போட்டித் தேர்வுகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை போட்டித் தேர்வுகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, 2024 க.பொ.த உயர்தரம் ,  2023 க.பொ.த   சாதாரண தரம் மற்றும் 2024 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகள் இவ்வருடம் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட திகதிகள் பின்வருமாறு, 2023 க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மே மாதம் 6ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரையும் , 2024 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர்  15ஆம் திகதியும், 2024 க.பொ.த உயர்தரப்பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி   முதல் டிசம்பர் 20  ஆம் திகதிவரை  நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, தெரிவித்துள்ளார்.

இதேவேளை    2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பின்னர்  அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply