ரஷ்ய ஏவுகணைக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது!

ரஷ்ய பசுபிக் கடற்படையின் ஏவுகணை கப்பல் வர்யாக், கொழும்பு துறைமுகத்திற்கு வணிக நோக்கத்தின் அடிப்படையில் அழைப்பை மேற்கொண்டுள்ளது.

கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த ரஷ்ய கப்பல் மார்ச் 4 வரை கொழும்பு துறைமுகத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
கப்பலின் கொடி அதிகாரி கெப்டன் 1 ஆவது தரவரிசை வெலிச்கோ அனடோலி வாசிசீவிச் மற்றும் கெப்டன் 2 ஆவது தரவரிசை குளுஷாகோவ் ரோமன் நிகோலாவிச் கட்டளை அதிகாரி ஆகியோர் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவை சந்திக்கவுள்ளனர்.

529 பேர் கொண்ட இந்த கப்பல் ஏவுகணை கப்பல் 187 மீட்டர் நீளமுள்ளதாகும்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள், நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிடவும், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் உள்ளார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply