யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இருவருக்கு கிடைத்த தண்டனை!

யாழ் – உடுத்துறை கடற்பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா தண்ட பணம் விதித்துள்ளது.

குறித்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்றைய தினம் (12) கிளிநொச்சி மேல் நீதிமன்றில் மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிய வருகையில், மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுத்துறை பகுதியில் கடற்றொழில் படகு ஒன்றில் வைத்து 11 கிலோ 95 கிராம் கஞ்சாவுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இதற்கமைய, கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருவருக்கும் தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் மூன்று இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply