பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

இலங்கைக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.

அரசாங்கத்தின் தலையீட்டுடன் இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் வெங்காயம் கிலோ ஒன்றின் விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கக் கூடும் என கூறியுள்ளனர்.

சந்தையில் தற்போது பெரிய வெங்காயம் கிலோவொன்று 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சந்தையில் தற்போது பெரிய வெங்காயத்துக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply