யாழ். தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதேபகுதியை சேர்ந்த 49 வயதான பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
இந் நிலையில் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
