பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகளை எதிர்வரும் சித்திரை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் தொடரும் வெப்பமான காலநிலையை பொருட்படுத்தாது சில பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புத்தாண்டு விடுமுறையின் பின்னரும் முதலாம் தவணை தொடரும் என்பதை கருத்திற் கொண்டு விளையாட்டு போட்டிகளை நடத்த முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் தொடரும் வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் அதிகரித்துள்ள நிலையில், அதிக வெளிப்புற செயற்பாடுகளால் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply