பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்டவர்கள் உரையாற்றியிருந்தனர்.
அத்தோடு பொலிஸாரால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சினைவுச் சின்னமாக வாள் வழங்கி வைக்கப்பட்டது.