சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை துண்டிக்கப்பட்ட பொது நிறுவனமாக நடத்த தீர்மானம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை துண்டிக்கப்பட்ட பொது நிறுவனமாக நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு, நேற்றைய தினம் திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும்பான்மையானோரால் பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இதன்மூலம், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஒரு தனியான பொது நிறுவனமாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது, இதனால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தனியார் துறைகளால் தேவையான முதலீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply