பெண்களுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள் – போதை விருந்தால் சம்பவம்!

அங்குலான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட பணியகத்தின் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கமைய அங்குலான பொலிஸ் கான்ஸ்டபிள் தங்குமிடத்தை சுற்றி வளைத்து சந்தேக நபர்களை சோதனை செய்த போது ஒரு கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் 20 மில்லிகிராம் போதைப்பொளை தெஹியத்தகண்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் கண்டுபிடித்துள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரிடமும் 260 மில்லிகிராம் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு, மற்றும் ஏனையவை சந்தேகநபரிடம் இருந்து மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தப்படும் பல உபகரணங்களுடன் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹியத்தகண்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் கடமையாற்றிய போது இந்த விருந்தில் கலந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply