தொழிநுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கம்!

கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று காலை பெங்களூர் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று சுமார் 40 நிமிடங்களின் பின்னர் மீண்டும் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை 1.13 மணிக்கு சுமார் 100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1.55 மணிக்கு மீண்டும் தரையிறங்கியதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

குறித்த சம்பவத்தின் போது விமானத்துள் இருந்த மக்கள் கடும் பயத்தில் கூச்சலிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply