வெல்லவாய பகுதியில் விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்!

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதி பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக அறிய முடிகிறது.

விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பேருந்து சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நிலை குறை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply