டொலரின் பெறுமதியில் ஏற்படவுள்ள மாற்றம்!

ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபா வரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வந்த போது அதிலிருந்து மீள்வதற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது.

ஆனால் அந்த நிலையிலிருந்து மீண்டு நிவாரணங்களை வழங்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.
தற்போது ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபா வரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் பொருட்களின் விலை குறைவடையும். அடுத்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 18ஆம் திகதியை விட கடந்த 19ஆம் திகதி (19.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply