தென்னை பயிர்ச்செய்கையில் வெள்ளை ஈயின் தாக்கம் : கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னையில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளது என தென்னை பயிர்ச்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் கூறியுள்ளார்.

வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் தென்னை பயிர்ச்செய்கை சபையின் முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னை பயிரில் காணப்படும் ஓலைகளில் வெள்ளை ஈயின் தாக்கம் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணெய், சலவைத்தூள் உள்ளிட்டவற்றை பயிர்களுக்கு மருந்து விசிறும் 20 லீட்டர் கொள்கலனின் கலந்து விசிறுவதன் மூலம் ஈயின் தாகத்தை கட்டுப்படுத்த முடியும்.

வெள்ளை ஈயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய திணைக்களத்தினை தொடர்பு கொண்டு மருந்து விசிறுவதன் ஊடாக நோயினை கட்டுப்படுத்த முடியும்” எனவும் தென்னை பயிர்ச்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply