யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று இரவு (25.03.2024) இடம்பெற்றுள்ளது.
சொகுசு பேருந்தொன்று வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார்சைக்கிளை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
