இலங்கையில் வெளியான பெண்களுக்கு எதிரான அத்துமீறல் செயற்பாடுகள்!

இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 1000இற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பிள்ளைகள் மீதான அத்துமீறல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்கு எதிரான அத்துமீறல், வன்முறை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பான 1,077 முறைப்பாடுகள் 2024 ஜனவரி 04 முதல் மார்ச் 10 வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதில், 477 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், 42 முறைப்பாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை, 550 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிள்ளைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை 109 என்ற சிறப்பு தொலைபேசி எண் அல்லது cwb.on என்ற மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் பதிவு செய்யலாம் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply