யாழ்ப்பாணத்தில், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களை அண்மித்த பகுதிகளிலும் சன நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றைய தினம் புதன்கிழமை முதல் பலப்படுத்தப்பட்டுள்ளன என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் போக்குவரத்தைச் சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு இன்று முதல் குறித்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.