ரமழான் மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேட தபால்சேவை!

ரமழான் மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் நீண்ட வார இறுதியில் விசேட தபால் மற்றும் கொரியர் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தபால் தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி சத்குமார, அதன்படி, ஏப்ரல் 12 ஆம் திகதி விடுமுறை நாளாக இருந்தாலும், நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் கேஷ் ஆன் டெலிவரி , எஸ்எல் போஸ்ட் கொரியர் மற்றும் ஈஎம்எஸ் ஆகியவற்றுக்கு சிறப்பு சேவைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply